பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் குறையாத வெள்ளம்! சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிப்பு
பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் குறையாத காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.


பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் குறையாத காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுக் கொள்ளளவை எட்டின. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து கணிசமாக நீர்வரத்து இருந்ததால் தொடர்ந்து அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் தாமிரவருணியில் திறந்து விடப்பட்டது.
பாபநாசம் கல்யாணதீர்த்த அருவி, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டதால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மழை குறைந்த போதிலும் அருவிகளுக்கு செவ்வாய்க்கிழமை நீர்வரத்து கணிசமாக இருந்தது. வெள்ளம் குறையாததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிப்பதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பதிவான மழை: செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 2 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 3 மி.மீ, சேர்வலாறு அணையில் 7 மி.மீ, மணிமுத்தாறு அணை, ராமநதி அணை, கருப்பாநதி அணைகளில் தலா 1 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 23.4 மி.மீ, சேரன்மகாதேவியில் 11 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டில் 22 மி.மீ, நான்குனேரியில் 5 மி.மீ, களக்காட்டில் 4.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1979.78 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 725 கனஅடி, கடனாநதி அணைக்கு 92 கனஅடி, ராமநதி அணைக்கு 35 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 173 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணைக்கு 100 கனஅடி, நம்பியாறு அணைக்கு 1083 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையிலிருந்து 1249.23 கனஅடி, மணிமுத்தாறு அணையில் 215 கனஅடி, கருப்பாநதி அணையில் 173 கனஅடி, வடக்குப்பச்சையாறு அணையில் 100 கனஅடி, நம்பியாறு அணையில் 1083 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணை-142.20 அடி, சேர்வலாறு அணை-148.49 அடி, மணிமுத்தாறு அணை-116.55 அடி, கடனாநதி அணை-84 அடி, ராமநதி அணை-82 அடி, கருப்பாநதி அணை-70.86 அடி, குண்டாறு அணை-36.10 அடி, அடவிநயினார் அணை-132 அடி, வடக்குப் பச்சையாறு அணை-50 அடி, நம்பியாறு அணை-22.96 அடி,
கொடுமுடியாறு அணை-52.50 அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...